மருத்துவ துறையில் சில கருப்பு ஆடுகள்
இன்றைய காலக்கட்டத்தில் எதிலும் கலப்படம் என்பது அதிகம் ஆகிவிட்டது. இது மருத்துவத் துறையையும் விட்டு வைக்கவில்லை. இன்றைக்கு ஏழைகளின் உயிரோடு போலி மருந்து வியாபாரிகள் விளை
யாடுவது மிகவும் பரிதாபமாக உள்ளது. ஒரு சிலர் சீக்கிரமாக பணக்காரர்கள் ஆக வேண்டும் என்று தவறான வழிகளில் சென்று பணம் சம்பாதிக்கிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழக அரசு ஒரு சில போலி மருந்து வியாபாரிகளை கைது செய்து இருக்கிறது. இவர்கள் கடந்த சில வருடங்களாகவே போலி மருந்து விற்பனையில் கொடி கட்டி பறந்துள்ளார்கள் . இவர்களின் வருமானம் கோடிகளில் இருந்துள்ளது.தமிழ்நாட்டில் எத்தனையோ ஏழை மக்கள் போலி மருந்தை உட்கொண்டு இறந்துள்ளார்கள். இன்றைய இந்தியாவில் பொய்
சொல்பவர்களுக்கும், ஏமாற்றுகாரர்களுக்கும் அரசியல் செல்வாக்கு அதிகமாக இருக்கிறது. கைதானவர்கள் கூடிய வரைவில் தங்களது செல்வாக்கை பயன்படுத்தி மிகவும் சீக்கிரமாக வெளியில் வந்து மீண்டும் இதே தொழிலை செய்ய வாய்ப்பு உள்ளது. ஏழைகளின் உயிரோடு விளையாடும் இவர்களை போன்றவர்களுக்கு மிகவும் கடுமையான
தண்டனைகள் அளிக்கப்படவேண்டும். அப்போதுதான் இவர்களின் விளையாட்டுத்தனதால் இறந்தவர்களின் ஆன்மா சந்தியடையும்.இதே போன்று சில தவறுகள் சில தனியார் மருத்துவமனைகளிலும் நடைபெறுகிறது. ஏழைகளுக்கு சிறந்த மருத்துவம் என்பது இன்றைய காலக்கட்டத்தில் கிடைப்பது இல்லை. அனேக தனியார் மருத்துவமனைகளில் மிக மிக அதிக கட்டணம் வசூலிக்கிறார்கள். பொது மருத்துவமனைகளிலம் ஒரு சில மருத்துவர்கள் ஏழைகளுக்கு சிறந்த வைத்தியம் பார்ப்பதில்லை. ஏனெனில் அனேக மருத்துவர்கள் சொந்தமாக மருத்துவம
னைகளும், கிளீக்குகளும் வைத்து மருத்துவம் பார்ப்பதால் வருமானம் ஒன்றே குறியாக இருக்கிறார்கள்.மருத்துவம் படிக்கும் இன்றைய இளைஞர்கள் தங்கள் படிப்பை முடித்ததும் கிராமங்களில் ஏழைகளுக்கு சிறந்த மருத்துவம் பார்ப்பதற்கு முன் வரவேண்டும். அப்போதுதான் ஒளிமயமான இந்தியாவை உருவாக்கமுடியும் என்பது நிதர்சனமான உண்மையாகும். மருத்துவ துறையில் உள்ள ஒரு சில கருப்பு ஆடுகளினால் நல்லவர்களின் சேவைக்கும் களங்கம் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிறது.
No comments:
Post a Comment