வாழ்க வளமுடன்

வாழ்க வளமுடன்

Sunday, May 30, 2010

ஜல்லிக்கட்டு

தமிழர்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு

பாரம்பரியமாக தென் தமிழகத்தின் வீர தீர விளையாட்டாக ஜல்லிக்கட்டு விளங்கிவருகிறது. பொங்கல் பண்டிகையின் போது இந்த வீர விளையாட்டு தென் தமிழகத்தின் அலங்காநல்லூர், பாலமேடு, மற்றும் பல பகுதிகளில் நடைபெற்றுவருகின்றது.

போட்டிகளில் பங்கேற்கும் காளைகளின் உரிமையாளர்கள், முதலில் இளம் கன்றுகளாக வாங்கி காலையில் கண்மாயில் காளைகளுக்கு நீச்சல் பழகிக்கொடுத்து, அதன் பின்னர் பருத்திக்கொட்டை, புண்ணாக்கு, தூசி, கருப்பட்டி, போன்ற உணவுப்பொருட்களை உணவாகக் கொடுக்கிறார்கள்.

மேலும் வயல் வெளிகளில் 2கயிறுகள் கட்டி காளைகளை அதன் இஷ்டத்திற்கு புல்லை மேயும்படி செய்யவைத்து மாலையில் வைக்கோலால் செய்து வைக்கப்பட்ட உருவ பொம்மையை இளைஞர்கள் விசில் அடித்தவுடன் காளைகள் ஆக்ரோஷமாக சீறிப்பாய்ந்து தனது கொம்புகளால் முட்டுவதுக்கும்,
மேலும் குப்பை மேட்டில் காளைகளை
நிறுத்தி கால்களால் தரையில் உரசி புழுதி பறக்கும்படி செய்யவும் பயிற்சி அளிக்கிறார்கள்.



தமிழக அரசு இந்த வருடம்
ஜல்லிக்க்கட்டை நல்ல பாதுகாப்புடனும் நடத்தி வீரர்களின் உயிருக்கும், உடமைக்கும் எந்தவித தீங்கும் வராமல் மிகவும் சிறப்பாக நடத்தியது.

No comments:

Post a Comment