கடன் அட்டை .......ஒரு தூண்டில்!இன்றைய ஆடம்பர உலகில் கடன் அட்டை (கிரெடிட் கார்ட்) என்பது ஒரு சமுதாய அந்தஸ்தாகிவிட்டது.
ஒன்றிற்கு மேல்பட்ட கடன் அட்டையை வைத்து இருப்பது ஒரு பகட்டகிவிட்டது. ஒரு பொருளை சொந்தகமாக வாங்குபவரை விட கடன் அட்டை மூலமாக வாங்குபவர்களுக்கு ஒரு தனி மதிப்பு கிடைப்பது சர்வசாதரனமாகிவிட்டது.
அது மட்டுமல்லாமல் இன்று தனியார் வங்கிகள் பல சலுகைகள் தந்து எந்தவித சான்று பத்திரமோ, விளக்க சான்றிதல்களோ இல்லாமலேயே கடன் அட்டைகளை தந்துவிடுகின்றன.
இதே போல் ஒரு நபர் முன்று அல்லது அதற்க்கு மேற்பட்டோ கடன் அட்டையை பெறுவது சுலபமாகிவிட்டது.
ஆனால் இதில் எத்தனை பேருக்கு அட்டையின் வட்டி விகிதம், இதர சேவை கட்டண விவரம், கடன் அட்டையை முறையாக பயன்படுத்தும் விவரம் தெரியும் என்று கேட்டால் தெரியாது என்பதே பதிலாக இருக்கும்.
கடன் அட்டையை தேர்வு செய்வது எப்படி?
தினசரி வாழ்கையில் எவ்வாறு பயன்படுத்துவது?
கடன் அட்டைகளை எவ்வாறு பராமரிப்பது?
கடன் அட்டையை தேர்வு செய்யும் போது வங்கியின் இதர ஒப்பந்தகளை ஆராய்ந்து கடன் அட்டையின் வருட கட்டணம் சேவை கட்டணம் ஆகியவற்றையும் தெளிவாக தெரிந்துக்கொண்டு விண்ணப்பியுங்கள்.
ஏஜென்ட்டுகளின் பேச்சை நம்பாமல் எழுத்து மூலமாக ஆதாரத்தை பத்திரமாக வைத்து இருக்கவும். உங்களின் மாத பில்லினை கவனமாக பார்க்கவும். நீங்கள் பயன்படுத்தாத அல்லது இலவச சேவை காலத்தில் சேவை கட்டணம் ஆகியவை வசூலித்து இருந்தால் உடனே வங்கிக்கு தெரியப்படுத்தி அதை உங்கள் கணக்கில் சரி செய்யவும். உங்களுடைய கடன் அட்டையின் மொத்த கடன் அளவை சரியாக தெரிந்து வைத்து இருக்கவும்.
முடிந்த வரைக்கும் பொருள்கள் வாங்கிய தேதியில் இருந்து 30நாள்களுக்குள் உங்களால் பணத்தை திருப்பி செலுத்த முடியும் என்றால் மட்டும் கடன் அட்டையை பயன்படுத்தவும். 30நாள்களுக்கு பிறகு உங்களால் செலுத்த முடியவில்லை என்றல் உங்கள் கணக்கில் வட்டி சேர ஆரம்பித்துவிடும். நன்றாக கவனமுடன் கையாளுங்கள்.
தினசரி வாழ்கையில் கடன் அட்டையை எவ்வாறு பயன்படுத்துவது?
ஆசையே துன்பத்துக்கு காரணம் என்பதை புரிந்துக்கொண்டு அத்தியாய தேவைகளுக்கு மட்டும் கடன் அட்டையை பயன்படுத்த வேண்டும். வெறும் ஆடம்பரத்திற்காக எதையும் வாங்கி உங்கள் கடன் சுமையை கூட்டிக்கொல்லாமல் முடிந்த வரை கையிருப்பை செலவழித்து மிகவும் அவசரமான காலத்திற்கு மட்டும் கடன் அட்டையை பயன்படுத்தவும். எப்போது கடன் அட்டையின் மூலம் செலவழித்தல் அந்த மாத பட்டியலுடன் ஒப்பிட்டு பார்க்கும் வரை பொருள்களின் ரசீதை கையில் வைத்து இருக்கவும். தேவையற்ற இடங்களில் கடன் அட்டையின் விபரங்களை பயன்படுத்துவதை தவிக்கவும். நண்பர்கள், மின்னாஞ்சல்கள் ஆகியவற்றில் அட்டையின் விபரங்களை பயன்படுத்தாமல் இருக்கவும். எப்போதும் உங்கள் கடன் தொகை உங்களின் மொத்த கடன் அளவிற்குள் இருக்குமாறு கடை பிடிப்பது அவசியம். கடன் அட்டையின் முறைகேடான பயன்பாட்டிற்கும் அட்டையின் உரிமையாளரே பொறுப்பு என்பதை எப்போதும் நினைவில் வைத்து இருங்கள்.
மாத தவணையை கட்ட முடியவில்லை என்றாலும் கூட சம்பந்த பட்ட வங்கிகளின் தொடர்பு எல்லையிலேயே இருக்கவும். உங்கள் மாத தவணையை வட்டியுடன் கட்ட உரிமை உள்ளத்தால் தவணையை தவறாமல் கட்ட வழியை பாருங்கள்.
வங்கிகளுக்கான போது தகவல் களஞ்சியம் சிவில் தளத்தில் உங்களை பற்றிய தகல்களை மற்ற வங்கிகள் பெறமுடியும் என்பதால் உங்களின் நேர்மையை கடைப்பிடிக்கவும்.
பல கடன் அட்டைகளை பயன்படுத்தி விட்டு வெளியில் வர முடியாமல் தவிப்பவர்கள் வட்டியில்லா பண மாற்று முறையை கடை பிடித்து சீக்கிரம் கடனை அடைக்க வழியை பாருங்கள்.
"கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்" என்று கலங்கி நிற்க்காமல் குடும்பத்துடன் கலந்து ஆலோசித்து தேவையான உதவிகளை பெற்று முடிந்த வரை கடனை அடைத்துவிட்டு தக்க சமயத்தில் உதவியர்களுக்கு திரும்ப கொடுத்து நல்ல பெயர், நல்ல உறவை இழக்காமல் பார்த்துக்கொள்ளவும்.
ஆக மொத்தத்தில் கடன் அட்டை என்பதை அவசரகால துருப்பு சீட்டாக பயன்படுத்தவும். இப்படி சந்தோசம் என்பது வெறும் ஆடம்பரத்தில் இல்லை உணர்ந்து வளமோடு வாழ்வதே நமக்கும் நம் குடும்பத்துக்கும் ஆனந்தம் தரும்.
கடன் அட்டையை நேசிக்கும் உங்கள் நண்பர்களிடம் இந்த கட்டுரையை பகிர்ந்து கொண்டு அவர்களும் பயன் பெற நீங்கள் உதவலாமே.
இப்பொழுதெல்லாம் வங்கிகள் வருமானத்திற்காக கடன் அட்டை எனும் தூண்டிலை இன்றைய இளைய சமுதாயத்தினரிடையே பயான்படுத்திக்கொண்டு வருகின்றன என்பது வருத்தத்தை அளிக்கிறது.
எனக்கு தெரிந்தது மற்றும் நான் படித்தவைகளில் இருந்து.