வாழ்க வளமுடன்

வாழ்க வளமுடன்

Saturday, May 29, 2010

சித்தன்னவாசல் ஓவியம்

சித்தன்னவாசல் மலையில் காலத்தால் அழிவில்லாத வண்ண ஓவியங்கள் எத்தனையோ நூர்றண்டுகளாக கலை நெஞ்சங்களின் கற்பனைக்கும் எழுச்சிக்கும் ஊற்றாக இருக்கிறது. ஆதர்சனமான அந்த கலைச்செல்வங்களுக்கு இப்போது துர்பாக்கிய நிலை. மகேந்திர பல்லவனின் ஆவி இதை கண்டிருக்குமா. இவற்றை உருவாக்கிய மகா கலைஞன் நினைத்து பார்திருப்பனா.
மூலிகையை அறைத்தோ வண்ணக்கற்களை போடியக்கியோ அழியாத வண்ணத்தை தயாரித்து ஓவியங்களை தீட்டிவிட்டோம். அவற்றுக்கு அழிவில்லை என்று மகிழ்ந்து போயிருப்பானோ அந்த மகா கலைஞன்.
வண்ணம் அழியாத அந்த ஓவியங்களை கடைசியில் சுரண்டி எடுத்திருக்கிறார்கள். நம்மவர்களின் அறியாத செய்கையினால் இன்று அந்த ஓவியங்கள் உருவத்தை இழந்து நிற்கின்றன. அவற்றின் ஆன்மா மட்டும் அழிவில்லாமல் தன்னை படைத்த கலைஞனின் கைவண்ணத்துக்கு காலத்தை வென்ற சாட்சியாக இருக்கிறது.
நம்மவர்களின் அறியாமையால் காலத்தால் அழியாத போக்கீஷங்கள் சிதலமடைந்து வருவது மனதிற்கு வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

No comments:

Post a Comment