வாழை பழத்தின் மகிமை
வாழைப்பழத்தில் ஊட்டச்சத்துக்கள் மட்டும் நிறைந்திருக்கவில்லை. மேலும் பல நோய்களை வராமல் தடுக்கக்கூடிய ஆற்றலையும் வாழைப்பழம் பெற்றுள்ளது. ஒவ்வருவரும் தினமும் ஒரு வாழைப்பழமாவது சாப்பிடுவது மிகவும் நல்லது. அதனால்தான் பழங்காலத்தில் எந்த விசேஷமாக இருந்தாலும் வெற்றிலையுடன் வாழைப்பழத்தை இணைத்துக் கொடுத்தனர். மலச்சிக்கல், குடல் பிரச்சினை, மனத் தளர்ச்சி ஆகியவற்றை நீக்கும் தன்மை உடையது. வாழைப்பழத்துடன் பால் சேர்த்து மில்க்ஷேக் சாப்பிட்டால் உடல் சோம்பல் ஓடிவிடும். புகை பழக்கத்தை விடமுடியாமல் தவிபவர்கள் வாழைப்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் புகைக்கும் எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவிடும்.
ஜாதிக்காய்க்கு சில நோய்களை தவிர்க்கும் இயற்கையான மருத்துவ குணங்கள் உள்ளன. இது உடலை வலிமையாக்கும், வாயு கோளாறு காராணமாக வயிறு உப்பிசம், வயிற்றுவலி, வயிற்று பொருமல், அஜீரண மந்தம், வாந்தி, பேதி, ஒற்றை தலைவலி, மூச்சிறைப்பு, இருமல், ஆகிய பிரச்சனைகளை நீக்கும் ஆற்றல் உடையது ஜாதிக்காய். குறிப்பாக ஆண்களுக்கு விந்துக் குறைவை போக்கிறது. ஜாதிக்காய் எண்ணை
பல்வலி, வாத நோய் ஆகிய சிக்கல்களை நீக்கும் ஆற்றல் உடையது.
பல்வலி, வாத நோய் ஆகிய சிக்கல்களை நீக்கும் ஆற்றல் உடையது.

No comments:
Post a Comment