வாழ்க வளமுடன்

வாழ்க வளமுடன்

Sunday, May 30, 2010

திரை அரங்கம்

தென் இந்தியாவின் முதல் திரையரங்கம்


சென்னை மாகாணத்தின் பல இடங்களில் டூரிங் தியேட்டர்களில் மவுனப்படங்கள் திரையிடப்பட்டு வந்தன. சென்னை மவுண்ட்ரோட்டில் போட்டோ ஸ்டுடியோ வைத்து இருந்த ரகுபதி வெங்கையா என்பவர், தானும் சினிமாவில் காலடி வைக்க விரும்பினார். முதல் கட்டமாக பியல் பிஷ்ஷர்ஸ் ராஜாஸ் கேஸ்கட் என்ற 500அடி நீளம் கொண்ட இரண்டு மவுன படங்களை அமெரிக்காவில் இருந்து வரவழைத்தார். கூடவே க்ரோனோ மெகாபோன் என்ற திரையிடும் ப்ரொஜக்டர் கருவியையும் வரவழைத்தார். சென்னை ரிப்பன் கட்டிடம் அருகில் இருக்கும் விக்டோரியா பப்ளிக் ஹால் என்ற அரங்கில் அந்த படங்களை திரையிட்டார். கூட்டம் அலைமோதியது. நல்ல வருமானம் கிடைத்தது. அதில் கிடைத்த வருமானத்தை கொண்டு ஒரு டூரிங் சினிமாவை தொடங்கினார். டூரிங் என்றால் ஊர் ஊராக சென்று சினிமாவை திரையிடுவது. இவரும் குண்டூர் தொடங்கி கட்டாக் வரை பல நகரங்களில் அந்த படங்களை திரையிட்டு லாபம் பார்த்தார்.
கிடைத்த லாபத்தை வைத்து சென்னையில் மவுனப்படத்தை திரையிடும் ஒரு நிரந்தர சினிமா தியேட்டரை கட்டினார். தென் இந்தியாவில் இந்தியர் ஒருவர் கட்டிய முதல் தியேட்டர் இது தான். 1913ல் கட்டப்பட்ட அந்த தியேட்டருக்கு கெயிட்டி என்று பெயரிட்டார். 2005வரை அந்த தியேட்டர் இயங்கிவந்தது.

இவரே 1914ல்தங்கச்சாலை சந்திப்பில் கிரவுன் என்ற தியேட்டர், 1915ல்புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் க்ளோப் என்ற தியேட்டரையும் கட்டினார். பின்னர் க்ளோப் தியேட்டர் ராக்சி என்று பெயர் மாற்றப்பட்டது. மூன்று தியேட்டர்களுமே மவுன படங்களை திரையிட்டு வந்தன.
அமெரிக்காவில் பிரபலமான யுனிவர்சல் நிறுவனம் தயாரித்த க்ளட்சிங் ஹேன்ட் கிரேட் ரிவார்டு, கீஸ் ஸ்டோன்காப்ஸ் போன்ற மவுன படங்களை வரவழைத்து தனது மூன்று தியேட்டர்களிலும் திரையிட்டார். ஹாலிவூட் சினிமாக்களை தெனிந்தியாவில் அறிமுகப்படுத்தியவர் வெங்கையாதான். இதன் மூலம் தெனிந்திய சினிமாவில் பெரும் தாக்கம் ஏற்பட்டது.

இந்த காலக்கட்டத்தில்தான் இந்தியாவில் ஹரிச்சந்திரா, கீசகவதம் போன்ற மவுனப்படங்கள் வெளிவந்தன. வெங்கையா இந்த இரண்டு படங்களையும் தனது மூன்று தியேட்டர்களிலும் மாறி மாறி திரையிட்டார். இவற்றின் வெற்றி இவரை படத்தயாரிப்பில் ஈடுபடும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. தனது மகன் ரகுபதி பிரகாசாவை லண்டனுக்கு திரைப்படதுறையில் பயிற்சிபெற அனுப்பினார்.

இந்தியர் ஒருவர் தெனிந்தியாவில் கட்டிய இந்த மூன்று தியேட்டர்களிலுமே 1932ல் பேசும் படங்களை திரையிடும் நவீன கருவிகளை பொருத்தினார். இதன்பின்னர் இங்கு பல பேசும் படங்கள் திரையிடப்பட்டன.

No comments:

Post a Comment