வாழ்க வளமுடன்

வாழ்க வளமுடன்

Sunday, May 30, 2010

உடலுக்குள் விஞ்ஞானம்

உடலுக்குள் விஞ்ஞானம்
துணிநேய்யக்கூடிய மில்லில் ஒரு வேடிக்கையைப் பார்க்கலாம். கண்டைஎன்று சொல்வார்கள். கண்டை என்றால் நாடா இல்லை. நாடாவுக்குள்ளாக நூல் சுற்றி வருவதைக் கண்டை என்று சொல்வார்கள். கண்டையை கைத்தறியில் தார் என்று சொல்வார்கள். நாடாவுக்குள்ளக நூல் சுற்றி ஓடிக்கொண்டே இருக்கும். எங்கேயாவது நூல் காலியானால் அந்த கண்டையை தூக்கி எரிந்து விடும். அப்படி தூக்கி எரிந்தவுடனே, இன்னொரு இயந்திரத்தில் ஓடிக்கொண்டே இருக்கிற கண்டையில் ஒன்றை எடுத்து காலியான அந்த இடத்தில் மாட்டிக்கொள்ளும்.
கண்டையைப் போன்ற விஞ்ஞானம் நம் உடலிலும் நடைபெறுகிறது. உடலில்

ஒவ்வொரு செல்லும் ஒன்றோடு ஒன்று இணைந்து இருக்கிறது. சீவகாந்த அழுத்தம் ஒவ்வொரு செல்லையும் அப்படியே இழுத்துப் பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறது. எங்கேயாகிலும் வேகம் அதிகமானாலும் குறைந்தாலும் செல்கள் உடைந்து விடும். உடனே உடலில் உள்ள இரத்த அணுக்கள் சேர்ந்து எந்தெந்த இடத்தில பற்றாகுறை உள்ளதோ அதது அந்தந்த இடத்தில புதுப்பிக்கப்படும்.

காந்த ஆற்றலினால் செல்களுக்குத் தேவையானதை தள்ளி வெளியே கொண்டு செல்கிறது. இவ்வாறாக செல்லில் ஒரு பெரிய நிறுவனத்தைப் போன்ற நிர்வாகம் நடைபெறுகிறது. தானாகவே நடைபெறும் இந்த இயக்கத்திற்கு கபாட இயக்கம் என்று பெயர்.

கபாடம் என்றால் இடம் விடாமல் கொவ்விப் பிடித்துக் கொண்டிருக்கிறது என்று பொருள். கண்டயைப் போன்ற இயக்கமே கபாட இயக்கம் ஆகும்.

No comments:

Post a Comment